மோடி வாக்குறுதிதான் அளிக்கிறார். ஆனால் நிறைவேற்றுவதில்லை என்று ராகுல் கூறியுள்ளார்.
Hyderabad: தெலங்கானா சட்டசபை தேர்தல் முன்னிட்டு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஐதராபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்தி பேசியதாவது-
பிரதமர் மோடியும், தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவும் வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கின்றனர். ஆனால் அவற்றை நிறைவேற்றுவதில்லை. நாட்டில் பெரும் பணக்காரர்கள் வாங்கிய 3 லட்சத்து 50 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்ய பிரதமர் மோடி தயாராக உள்ளார். ஆனால், ஏழை விவசாயிகளின் கடனைப் போக்க அவர் தயாராக இல்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கிய விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் இங்கு 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் எங்கள் முதல்வர் வேலை பார்ப்பார்.
தெலங்கானா மாநிலத்தில் டிசம்பர் 7-ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. முடிவுகள் டிசம்பர் 12-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.