This Article is From Mar 25, 2019

சிவகங்கையில் கார்த்திக் சிதம்பரத்திற்கு இரண்டாவது வாய்ப்பு!

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிராக சிதம்பரம் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் சார்பில் சிவகங்கையில் போட்டியிடுகிறார்.

சிவகங்கையில் கார்த்திக் சிதம்பரத்திற்கு இரண்டாவது வாய்ப்பு!

தனது பிரசார வாகனம் குறித்த புகைப்படத்தை கார்த்தி சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

Sivaganga, Tamil Nadu:

சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் உதவிசெய்யும் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுவையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டிகிறது. இதில் தமிழகத்தில் 9 இடங்களும், புதுவையில் ஒரு இடமும் காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த காங்கிரஸின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. அதில் சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் இந்த தொகுதியில் மோதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, இரண்டவாது முறையாக சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் என்னை வெற்றி பெற செய்ய காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் உதவி செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், தேர்தலுக்கு பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். மத்தியில் ராகுல் காந்தி பிரதமர் ஆவார். அதேபோல் தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று அவர் கூறியுள்ளார்.

சிவகங்கை தொகுதி 1984 முதல் ப.சிதம்பரத்திற்கு 6 முறை ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாருக்கு வழங்கப்பட்டது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட கார்திக் சிதம்பரம் 4வது இடத்தையே பிடித்தார். அதாவது, முதலில் அதிமுக வேட்பாளரும், இரண்டாவது திமுக வேட்பாளரும், மூன்றாவது பாஜவின் எச்.ராஜாவும், நான்காவது கார்த்தி சிதம்பரமும் இடம்பெற்றனர்.

முன்னதாக, மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில், ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தார். அப்போது 2006-ம் ஆண்டு மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேசன் சர்வீசஸ் ஹோல்டிங்க்ஸ் லிமிடெட், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது.

இந்த முதலீட்டுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழுவின் அனுமதியை பெறாமல், விதிமுறைகளை மீறி வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் மூலம் ப.சிதம்பரம் அனுமதி அளித்து விட்டார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த அனுமதியைப் பெறுவதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


 

.