This Article is From Mar 10, 2020

60 வயதில் திருமணம் செய்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்!

ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலோட், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமத் படேல் ஆகியோரும் திருமண நிகழ்வில் பங்கெடுத்தனர். 

60 வயதில் திருமணம் செய்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்!

மகாராஷ்டிர அரசியல்வாதியான பாலகிருஷ்ணாவின் மகன் முகுல் வாஸ்னிக். 

ஹைலைட்ஸ்

  • முகுல் வாஸ்னிக், ரவீனா குரானாவை மணந்துள்ளார்
  • ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலோட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
  • டெல்லியில்தான் இந்த திருமண நிகழ்ச்சி நடந்தது
New Delhi:

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முகுல் வாஸ்னிக், தனது 60வது வயதில், நீண்ட நாள் தோழியான ரவீனா குரானாவை மணமுடித்துள்ளார். டெல்லியில் உள்ள 5 நட்சத்திர விடுதியில் நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் காங்கிரஸின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலோட், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமத் படேல் ஆகியோரும் திருமண நிகழ்வில் பங்கெடுத்தனர். 

கடந்த ஆண்டு ராகுல் காந்தி, நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து பலர் அந்தப் பதவிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதில் முக்கியமானவர் முகுல் வாஸ்னிக். மகாராஷ்டிர அரசியல்வாதியான பாலகிருஷ்ணாவின் மகன் முகுல் வாஸ்னிக். 

இந்த திருமணம் குறித்து அஷோக் கெலோட், “வாழ்க்கையில் இணைந்து புதிய பயணத்தைத் தொடங்கியுள்ள முகுல் வாஸ்னிக் ஜி மற்றும் ரவீனா குரானா ஜிக்கு எனது வாழ்த்துகள். இனி வரும் காலங்கள் உங்கள் வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கட்டும். ஆசியோடு இருங்கள்,” என ட்வீட்டியிருந்தார். 

முன்னாள் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரியும், “நான் முகுல் வாஸ்னிக்கை 1984 ஆம் ஆண்டும் ரவீனாவை 1985 ஆம் ஆண்டும் சந்தித்தேன். இருவருக்காகவும் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடவுளின் ஆசி இருவருக்கும் இருக்கட்டும்,” என்றார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.