This Article is From Feb 11, 2019

ட்விட்டருக்கு வந்த பிரியங்கா காந்தி; சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான ஃபாலோவர்ஸ்!

2014 தேர்தலின்போதும், ராகுல் காந்திக்காகவும், அன்னை சோனியா காந்திக்காகவும் பிரியங்கா, பிரசாரம் செய்தார்.

ட்விட்டருக்கு வந்த பிரியங்கா காந்தி; சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான ஃபாலோவர்ஸ்!

இன்று காலை 11:49 மணிக்கு, பிரியங்கா ட்விட்டரில் இணைந்துள்ளார் என்று காங்கிரஸின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து பதிவிடப்பட்டது

New Delhi:

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதரா இன்று அதிகாரபூர்வமாக ட்விட்டரில் இணைந்துள்ளார். அவர் ட்விட்டரில் இணைந்த சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் பின் தொடர்ந்துள்ளனர். இன்றுதான் பிரியங்கா, உத்தர பிரதேசத்தின் லக்னோவில் சாலை மார்க்கமாக பயணம் செய்கிறார். அவர் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிஸின் கிழக்கு உத்தர பிரதேச பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சென்ற வாரம், காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா நியமிக்கப்பட்டதில் இருந்து, அவர் தொடர்ந்து அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். பிரியங்காவின் வருகை, காங்கிரஸ் கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இன்று காலை 11:49 மணிக்கு, பிரியங்கா ட்விட்டரில் இணைந்துள்ளார் என்று காங்கிரஸின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து பதிவிடப்பட்டது. அறிவிப்பு வெளியான 15 நிமிடங்களில், 5000 பேர் அவரை பின் தொடர்ந்தனர். ஒரு மணி நேரத்தில் 25,000 பேர் பிரியங்காவை பின் தொடர்ந்தனர். இன்னும் ட்விட்டரில் எந்தப் பதிவையும் பிரியங்கா போடவில்லை. 
 

ஒரு சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் வர உள்ளதால், காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் ராகுல் காந்தியும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர். ராகுல் குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். 

2014 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் மோடிக்கும், பாஜக-வுக்கும் சமூக வலைதளங்களில் அதிக ஆதரவு இருந்தது. ஆனால், தற்போது காங்கிரஸுக்கும் ஆதரவு பெருகி வருவதாக தெரிகிறது. 
 

pgt178t8

 

2014 தேர்தலின்போதும், ராகுல் காந்திக்காகவும், அன்னை சோனியா காந்திக்காகவும் பிரியங்கா, பிரசாரம் செய்தார். ஆனால், அப்போது அவர் தீவிர அரசியலில் இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

.