This Article is From Nov 06, 2018

கர்நாடகா இடைத் தேர்தல்: ஜமகாண்டியில் காங்கிரஸ் வெற்றி!

இடைத் தேர்தலின் முடிவுகள் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மககளவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று நம்பப்படுகிறது

இடைத் தேர்தலில் ஆனந்த் வெற்றிபெற்றுள்ள நிலையில், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்

New Delhi:

கர்நாடகாவில் இன்று 3 லோக்சபா தொகுதிகளுக்கும், 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இடைத் தேர்தலின் முடிவுகள் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மககளவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் ஜமகாண்டி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸின் ஆனந்த் சித்து நியாமகவுடா பாஜக-வின் ஸ்ரீகாந்த் குல்கர்னியை 39,480 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஜமகாண்டி சட்டப்பேரவைத் தொகுதியைப் பொறுத்தவரையில், அதன் உறுப்பினரான சித்து நியாமகவுடா சில மாதங்களுக்கு முன்னர் விபத்தில் இறந்துவிட்டார். அதனால் அங்கு இடைத் தேர்தல் நடத்தும் சூழல் உருவானது.

இதையடுத்து காங்கிரஸ் சார்பில், நியாமகவுடாவின் மகன் ஆனந்த் சித்து நியாம்கவுடா, இடைத் தேர்தலில் நிறுத்தப்பட்டார். நவம்பர் 3 ஆம் தேதி இடைத் தேர்தல் நடந்த போது, ஜமகாண்டியில் தான் அதிகபட்சமாக 77 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.

இடைத் தேர்தலில் ஆனந்த் வெற்றிபெற்றுள்ள நிலையில், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

.