Read in English
This Article is From Oct 08, 2018

“வட மாநிலத்தவர் உழைக்காவிட்டால் மும்பையின் வளர்ச்சி நின்றுவிடும்” : காங்கிரஸ்

வட இந்தியர்களை சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் இவ்வாறான கருத்தை கூறியிருப்பது மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement
நகரங்கள்

வட மாநில மக்கள் மும்பை மீது எப்போதும் நன்றியுணர்வு கொண்டவர்கள் என்கிறார் சஞ்சய் நிருபம்

Mumbai:

காங்கிரஸ் கட்சியின் மும்பை நகர தலைவர் சஞ்சய் நிருபம் அளித்துள்ள பேட்டியில், வட மாநிலத்தவர் உழைக்காவிட்டால் மும்பையின் வளர்ச்சி நின்று விடும் என்றும், மும்பை மக்களுக்கு உண்ண உணவு கூட கிடைக்காது. மும்பை மீது எப்போதும் நன்றியுணர்வு கொண்ட மக்களாக வட மாநிலத்தவர்கள் உள்ளனர். மும்பை மக்களின் சுமைகளை தாங்கிக் கொண்டு வட மாநில மக்கள் உழைக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.

வட இந்திய மக்களை அவர்கள் சொந்த மாநிலத்திற்கு விரட்டும் நடவடிக்கையில் ஒருபோதும் ஈடுபடக் கூடாது என்றும் எச்சரிக்கை செய்துள்ளார். மாநிலத்தில் வலுவாக இருக்கும் சிவசேனா கட்சி, பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை பதிவு செய்து வருகிறது.இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சஞ்சய் நிருபம் பேசிய இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர் சத்ருகன் சின்ஹாவும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய நிருபம்,“ வட மாநில மக்கள் பால் உற்பத்தி செய்தல், செய்தித் தாள் விநியோகம், காய்கறி விநியோகம் உள்ளிட்ட அடிப்படை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வேலையை நிறுத்திக் கொண்டால் நமக்கு ரொட்டி, பால், காய்கறிகள் கிடைக்காது. ஆட்டோ, டாக்ஸி, ரிக்ஷாவில் நாம் செல்லமுடியாது என்று கூறினார்.
 

Advertisement
Advertisement