This Article is From Oct 29, 2018

தேர்தல் வாக்குறுதிகளுக்காக புதிய இணையதளம் தொடங்கிய காங்கிரஸ்!

தேர்தல் வாக்குறுதிகளுக்கான கருத்துக்களை கேட்பதற்கு இணையதளம் ஒன்றை காங்கிரஸ் கட்சியினர் தொடங்கியுள்ளனர். அதில் 16 மொழிகள் உள்ளன. வாட்ஸ் அப் எண்ணும் கொடுக்கப்பட்டள்ளது அதன் மூலமும் கருத்துக்களை கூறலாம்

தேர்தல் வாக்குறுதிகளுக்காக புதிய இணையதளம் தொடங்கிய காங்கிரஸ்!

காங்கிரஸ் கட்சியினர் 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கான வாக்குறுதிகளை வரையறுக்க தொடக்கியுள்ளனர்.

New Delhi:

காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் வாக்குறுதிகளில் எவை எல்லாம் இடம் பெற்றால் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள மக்களின் குரல் என்ற தீமில் இன்று இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் www.manifesto,inc.in. என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் பேசுகையில்,

இந்த இணையதளத்தில் 16 மொழிகள் உள்ளன. வாட்ஸ் அப் எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். மேலும், இதில் மில்லியன் மக்கள் தங்களது கருத்துக்களை பகிர்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

காங்கிரஸ் தற்போது தேர்தல் வாக்குறுதிகளை வரையறுக்கத் துவங்கியுள்ளது. 22 நபர்கள் இந்த குழுவில் செயல்படுகிறார்கள். அக்.1 ஆம் தேதி இந்த திட்டம் செயல்படுத்த தொடங்கப்பட்டது. இதில், விவசாயம், பொருளாதாரம், சிறு மற்றும் குறு தொழில் என 20க்கும் மேற்பட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இன்று வரை, 30 ஆலோசனைகள் தேர்தல் வாக்குறுதிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் 150-160 வாக்குறுதிகள் உறுதி செய்யப்படும். காங்கிரஸ் கமிட்டி, இந்த குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் வாக்குறுதிகளை கொண்டு முடிவு செய்வார்கள்.

இந்த வாக்குறுதிகள் 2019 தேர்தலுக்கும் முன் சரியான சமயத்தில் வெளியிடப்படுமென்று ப.சிதம்பரம் கூறினார்.
 

.