বাংলায় পড়ুন Read in English
This Article is From Nov 03, 2018

“சிபிஐ இயக்குனருக்கு ஓய்வு அளித்தது சட்டவிரோதம்”- உச்ச நீதிமன்றத்தை நாடும் காங்கிரஸ்

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவுக்கு ஓய்வு அளித்தது சட்டவிரோதம் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்

Advertisement
இந்தியா
New Delhi:

மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவுக்கு கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டதை உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், அலோக் வர்மாவுக்கு அளிக்கப்பட்ட கட்டாய விடுப்பு என்பதது சட்டவிரோதம் என்று தெரிவித்துள்ளார். மீண்டும் அவரை பதவியில் அமர்த்த வேண்டும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியிருக்கிறார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவராகவும், உயர் அதிகாரிகளை தேர்வு செய்யும் தேர்வுக்குவின் தலைவர் பொறுப்பிலும் மல்லிகார்ஜுன கார்கே இருந்து வருகிறார். சிபிஐ தேர்வுக்குழுவில் மொத்தம் 3 பேர் உள்ளனர். மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் தேர்வுக்குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.

சிபிஐ-யில் இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் இணை இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தனா ஆகியோருக்கு இடையே அதிகாரப் போட்டி காணப்பட்டது. இதனை முடிவுக்கு கொண்டுவருவதற்காக பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டார். தற்போது, அலோக் வர்மாவுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement