Read in English
This Article is From Aug 21, 2018

‘இனி என் தொகுதிக்குச் செல்லலாம்!’- கட்சியில் சேர்க்கப்பட்டது குறித்து மணி சங்கர் ஐயர்

பிரதமர் நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியதற்காக காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்தார் மணி சங்கர் ஐயர்

Advertisement
இந்தியா
New Delhi:

பிரதமர் நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியதற்காக காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்தார் மணி சங்கர் ஐயர். இந்நிலையில் அவரை மீண்டும் கட்சியில் சேர்த்துள்ளது காங்கிரஸ். இது குறித்து மணி சங்கர் ஐயர், ‘இனி என் தொகுதிக்குச் சென்று என் கடமைகளை ஆற்றலாம்’ என்று கருத்து தெரிவித்துள்ளார். 

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் குஜராத் தேர்தல் நடக்க இருந்த சமயத்தில், பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசினார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர். இதையடுத்து, அவரை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதனால், அவர் தீவிர அரசியலில் இருந்து கடந்த சில மாதங்களாக விலகி இருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஒழுங்குமுறை கமிட்டி, மணி சங்கர் ஐயர் மீதிருந்த தடையை நீக்க சம்மதம் தெரிவித்ததை அடுத்து, அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

Advertisement

இது குறித்து மணி சங்கர் ஐயர், ‘மீண்டும் கட்சியில் இணைந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. தேர்தல் வர இன்னும் சில மாதங்களே இருப்பதனால், என் தொகுதிக்குச் சென்று பணிகளை ஆற்றலாம். என் மீது தடை இருந்த காரணத்தால், கடந்த 9 மாதங்கள் எனது தொகுதிக்கு செல்ல முடியாத நிலை இருந்தது’ என்றவரிடம்,

‘எதிர்கட்சி தலைவர்கள் மீது தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசக் கூடாது என்று உங்கள் கட்சி அறிவுறுத்தியுள்ளதா?’ என்று கேட்கப்பட்டதற்கு, ‘கட்சி உள் விவகாரங்கள் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை’ என்று மட்டும் சொல்லி முடித்துக் கொண்டார். 

Advertisement
Advertisement