This Article is From Jul 09, 2020

உ.பி ரவுடி விகாஸ் துபே கைது: வழக்கை சிபிஐ விசாரிக்க பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!

கான்பூர் வழக்கை கையாள்வதில் உத்தரபிரதேசத்தில் உள்ள பாஜக அரசு முழுமையான தோல்வியடைந்துள்ளது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

உ.பி ரவுடி விகாஸ் துபே கைது: வழக்கை சிபிஐ விசாரிக்க பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!

உ.பி ரவுடி விகாஸ் துபே கைது: வழக்கை சிபிஐ விசாரிக்க பிரியங்கா காந்தி வலியுறுத்தல்! (File)

New Delhi:

கைது செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபேவுக்கு பாதுகாப்பு வழங்கியது தொடர்பான உண்மைகளை அறிய, சிபிஐ விசாரணை தேவை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். 

கான்பூர் வழக்கை கையாள்வதில் உத்தரபிரதேசத்தில் உள்ள பாஜக அரசு முழுமையான தோல்வியடைந்துள்ளது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

நான்கு மாநிலங்களில் 5 நாட்களுக்கு மேலாக துரத்தப்பட்டு வந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள கோவிலில் ரவுடி விகாஸ் துபேவை இன்று காலை போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்த வழக்கின் அடுத்தடுத்த நிகழ்வுகளால், பாதுகாப்பில் உள்ள சிக்கல்களை வெளிப்படுத்தியதுடன், அதில் உள்ள தவறான நிலையை வெளிப்படுத்துகிறது என்று பிரியங்கா தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ட்விட்டர் பதிவில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கூறும்போது, கடந்த மூன்று மாதங்களில் காவல்துறையினர் தரப்பில் குறிப்பிடத்தக்க குற்றாவாளிகள் பட்டியலில், விகாஸ் துபே பெயர் இடம்பெறவில்லை என்றும், அதனால் உயரதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும், கான்பூரின் மிருகத்தனமான படுகொலைக்கு பின்னர் உத்தர பிரேதசம் அரசு துல்லியத்தன்மையுடன் செயல்பட தவறிவிட்டது. இத்தனை எச்சரிக்கைக்கு பின்னரும், குற்றம்சாட்டப்பட நபர் உஜ்ஜைன் வரை சென்றுள்ளது பாதுகாப்பு குறித்த தவறான நிலையை வெளிப்படுத்துகிறது. 

இதுதொடர்பாக உத்தர பிரதேச அரசு சிபிஐ விசாரணையை நடத்த வேண்டும் என்றும் விகாஸூக்கான பாதுகாப்பு தொடர்புகளையும், அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

.