This Article is From Oct 25, 2018

2019 தேர்தல் வாக்குறுதி அறிக்கை: செயற்பாட்டாளர்கள் உதவியை நாடும் காங்கிரஸ்!

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள், மும்பையை மையமாகக் கொண்டு செயல்படும் செயற்பாட்டளர்களை சந்தித்துப் பேசியுள்ளனர்

2019 தேர்தல் வாக்குறுதி அறிக்கை: செயற்பாட்டாளர்கள் உதவியை நாடும் காங்கிரஸ்!

2019 நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதி அறிக்கையில், செயற்பாட்டளர்களின் கோரிக்கைகள் சேர்க்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

Mumbai:

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள், மும்பையை மையமாகக் கொண்டு செயல்படும் செயற்பாட்டளர்களை சந்தித்துப் பேசியுள்ளனர். மும்பை நகரத்தில் இருக்கும் சிக்கல்கள் குறித்து காங்கிரஸார், செயல்பாட்டளர்களுடன் கலந்து ஆலோசித்து இருப்பதாக தெரிகிறது. இதன் மூலம், 2019 நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதி அறிக்கையில், செயற்பாட்டளர்களின் கோரிக்கைகள் சேர்க்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா, காங்கிரஸின் தேர்தல் அறிக்கை துணை கமிட்டியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். அவர், கட்சியின் ‘ஜன் அவாஸ்' திட்டத்தின் ஒரு பகுதியாக மும்பையில் இருக்கும் பலதரப்பட்ட மக்களை சந்தித்து உரையாடினார். சந்திப்புக்குப் பின்னர் செல்ஜா, ‘எங்கள் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் பிரச்னை குறித்து கேட்டறிய சொல்லி இருக்கிறார். இதன் மூலம் மக்களின் பிரச்னைகளை தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி தான், இந்த நாட்டுக்கு பல்வேறு அமைப்புகளை உருவாக்கித் தந்துள்ளது. ஆனால், அவை எல்லாம் தற்போது ஒன்றன் பின் ஒன்றாக அழிக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.

குழுவின் இன்னொரு உறுப்பினரான மும்பை நகர காங்கிரஸ் தலைவர், சஞ்சய் நிருபம், ‘பெரு நகரங்களில் மக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்னைகள் குறித்து செயற்பாட்டளர்களுடன் விவாதிக்கப்பட்டது. சுகாதாரம், வீட்டு வசதி, தண்ணீர் சப்ளை, துப்பரவுப் பணி, சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது' என்று கூறினார். 

.