Bengaluru: கர்நாடகாவில் உள்ள 105 நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்று வருகின்றது
இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி, காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வருகிறது. 846 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 788 இடங்களில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளன. 307 இடங்களில் மதசார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மைசூரு, ஷிவமொக்கா, தும்கூரு ஆகிய மூன்று தொகுதியில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. கர்நாடக தேர்தலில் இதுவரை எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், இந்த தேர்தலிலும் காங்கிரஸ், மஜத கட்சி கூட்டணி ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
கடந்த ஆகஸ்டு மாதம் நடைப்பெற்ற நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், மொத்தம் 67% வாக்குகள் பதிவாகியுள்ளாதக தகவல் வெளியாகியுள்ளன.