என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமி கேசவன், 83,496 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.
புதுச்சேரி மாநிலத்துக்கு உட்பட்ட ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி, வெற்றிவாகை சூட உள்ளது.
அக்கட்சி சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கம், 1,81,398 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமி கேசவன், 83,496 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி, திமுக-வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 19 தொகுதிகளில் போட்டியிட்டது. அதன் கூட்டணிக் கட்சிகள் 19 தொகுதிகளில் போட்டியிட்டன. வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. காங்கிரஸுக்கு கூட்டணியில் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டது.
இதுவரை வந்த முடிவுகளின்படி காங்கிரஸ், தமிழகத்தில் தான் போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 36 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அகில இந்திய அளவில் பாஜக 300 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.