ரயில் பாதையில் நின்று தசரா கொண்டாட்டங்களை ஏராளமானோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது வேகமாக வந்த ரயில் மோதியது. இதில் 50 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார். மேலும், விபத்து நடந்த அமிர்தசரஸ் பகுதிக்கு நாளை செல்கிறார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில்,
பஞ்சாபில் ரயில் விபத்து சம்பவத்தில் 50க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று உடனடி நிவாரணம் வழங்க மாநில அரசு மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு நான் வலியுறுத்தியுள்ளேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் வேகமாக மீண்டு வர நான் பிரார்த்தனை செய்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)