This Article is From Mar 19, 2020

பத்திரிகையாளரை தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அமித் ஷாவுக்கு தமிழக காங். எம்.பி. கடிதம்

விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'விருதுநகர் மாவட்டத்தில் மாநில அமைச்சரின் தூண்டுதலின் பேரில் பத்திரிகை நிருபர் கார்த்திக் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

பத்திரிகையாளரை தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அமித் ஷாவுக்கு தமிழக காங். எம்.பி. கடிதம்

தாக்குதல் சம்பவம் மார்ச் 3-ம்தேதி நடந்தது.

ஹைலைட்ஸ்

  • உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார் காங். எம்.பி.
  • மாநில அமைச்சர் உத்தரவின்பேரில் தாக்குதல் நடந்திருப்பதாக புகார்
  • சிபிஐ வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் கோரிக்கை
Virudhunagar:

விருதுநகரில் பத்திரிகை நிருபர் கார்த்திக் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி விருதுநகர் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது-

விருதுநகர் மாவட்டத்தில் மாநில அமைச்சரின் தூண்டுதலின் பேரில் பத்திரிகை நிருபர் கார்த்திக் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் மார்ச் 3, 2020-ல் நடந்துள்ளது. 

ரவுடிகள் நடத்திய கொடூர தாக்குதலில் செய்தியாளர் கார்த்திக் பலத்த காயம் அடைந்துள்ளார். இந்த தாக்குதலுக்கு மாநில அமைச்சர் ஒருவரின் தூண்டுதலே காரணம் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. 

பொறுப்பு மிக்க அமைச்சர் ஒருவரே காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுவதால் இந்த விவகாரத்தில் போலீசார் நேர்மையாக விசாரிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. 

எனவே செய்தியாளர் கார்த்திக் தாக்கப்பட்ட சம்பவத்தை சிபிஐ விசாரிப்பதற்கு நீங்கள் உத்தரவிட வேண்டும் என்றும், அப்படிச் செய்தால் மட்டுமே நீதி நிலைபெறும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

.