This Article is From Nov 27, 2019

P Chidambaram-க்குப் பிணை கிடைக்குமா..?- சிறைக்குச் சென்று சந்தித்த ராகுல், பிரியங்கா!

INX Media corruption case - கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி சிதம்பரம், அமலாக்கத் துறை தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டார்.

P Chidambaram-க்குப் பிணை கிடைக்குமா..?- சிறைக்குச் சென்று சந்தித்த ராகுல், பிரியங்கா!

சிபிஐ-யின் வழக்கில் அவருக்கு கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி பிணை கொடுக்கப்பட்டது. (File)

New Delhi:

ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் (INX Media Case) வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் (P Chidambaram). தன்னை விடுவிக்கக் கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பிணை வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் காங்கிரஸின் ராகுல் காந்தி (Rahul Gandhi) மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா (Priyanka Gandhi) ஆகியோர், சிதம்பரத்தை நேரில் சென்று சந்தித்துள்ளனர். 

பல வெளிநாடுகளில் ஷேல் நிறுவனங்களைச் சிதம்பரம் உருவாக்கியுள்ளதாகவும், வெளிநாடுகளில் வங்கிக் கணக்குகளை திறந்துள்ளதாகவும் அமலாக்கத் துறை சிதம்பரம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது. இதற்குப் பிணை கேட்டு சிதம்பரம் தாக்கல் செய்துள்ள வழக்கில் முன்னதாக வாதிட்ட அமலாக்கத் துறை, “தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து, சுயலாபத்துக்காக பணம் சேர்த்துள்ளார் சிதம்பரம்,” என்று கடுமையாக சாடியது. 

மேலும் சிதம்பரத்துக்கு ஏன் பிணை கொடுக்க்க கூடாது என்பதற்கு அமலாக்கத் துறை, “வழக்கு தொடர்பான ஆவணங்களை அழிப்பதற்குச் சிதம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளதாக எங்களுக்குப் போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வழக்கின் சாட்சியங்கள் மத்தியிலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்,” என்று நீதிமன்றத்தில் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் சொல்கிறது. 

கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி சிதம்பரம், அமலாக்கத் துறை தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி, சிபிஐ அமைப்பு தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யபட்டார். சிபிஐ-யின் வழக்கில் அவருக்கு கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி பிணை கொடுக்கப்பட்டது. 

கடந்த 2000 ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்தது. 


 

.