This Article is From Oct 16, 2018

குஜராத்தில் நிறுவப்பட உள்ள படேல் சிலை… காங்கிரஸ் வைத்த ‘ஆர்.எஸ்.எஸ் தடை ஆணை’ கோரிக்கை!

குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேலின், பிரமாண்ட சிலை நிறுவப்பட உள்ளது

குஜராத்தில் நிறுவப்பட உள்ள படேல் சிலை… காங்கிரஸ் வைத்த ‘ஆர்.எஸ்.எஸ் தடை ஆணை’ கோரிக்கை!

1948 ஆம் ஆண்டு படேல் வெளியிட்ட ஒரு ஆணையை பொறிக்கச் சொல்லி கோரிக்கை வைத்துள்ளது காங்கிரஸ்

Pune:

குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேலின், பிரமாண்ட சிலை நிறுவப்பட உள்ளது. இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். ‘ஒற்றுமையின் சிலை’ என்று வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த சிலைக்குக் கீழ் என்ன பொறிக்கப்பட வேண்டும் என்பது குறித்து காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் ஷர்மா, ‘பாஜக-வில் எந்த வித முன் மாதிரிகளும் இல்லை. எனவே அவர்கள் சர்தார் வல்லபாய் படேலின், ‘ஒற்றுமையின் சிலை’-யை உருவாக்குகிறார்கள். அதுவும் சீனாவில் வைத்து செய்திருக்கிறார்கள்.

1948 ஆம் ஆண்டு, மகாத்மா காந்தி கொல்லப்பட்டப் பிறகு ஒரு அமைப்பை, ஆணை வெளியிட்டுத் தடை செய்தார் படேல். அந்த ஆணை குறித்து, ‘ஒற்றுமையின் சிலை’-க்குக் கீழ் பொறிக்கப்பட வேண்டும். அப்போது இந்த நாட்டுக்கு தடை செய்யப்பட்ட அந்த அமைப்பு குறித்து படேல் என்ன நினைத்தார் என்பது தெரியும்’ என்று கருத்து கூறியுள்ளார்.

ஷர்மா, எந்த அமைப்பு என்று நேரடியாக சொல்லவில்லை என்றாலும், அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தான் கூறுகிறார் என்பதை யூகிக்க முடிகிறது. காந்தி கொல்லப்பட்டப் பின்னர் சிறிது காலத்துக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பை படேலின் உத்தரவின் பேரில் இந்திய அரசு தடை செய்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

.