This Article is From Nov 30, 2018

தெலங்கானா முதல்வரை வம்பிழுக்கும் ராகுல் காந்தி..!

தெலங்கானாவில் இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்

தெலங்கானா முதல்வரை வம்பிழுக்கும் ராகுல் காந்தி..!

டிசம்பர் 7 ஆம் தேதி தெலங்கானாவில் இருக்கும் அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது

Hyderabad:

தெலங்கானாவில் இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் ஐதராபத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசியபோது, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை கடுமையாக விமர்சித்தார்.

பிரசாரத்தின்போது ராகுல், ‘பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் சந்திரசேகர் ராவும், கள்ள முதலாளித்துவத்தை தெலங்கானாவில் ஊக்குவித்து வருகின்றனர். அவர்கள் விவசாயிகளின், பழங்குடியினரின் உரிமைகளை மறுத்து வருகின்றனர்.

சந்திரசேகர் ராவின் ஒரே வேலை, காங்கிரஸ் கொண்டு வந்த பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி, அதற்கு நிதியை உயர்த்துவது தான். மாநில மக்களின் வளர்ச்சியைப் பொருட்படுத்தாமல், ராவ், தனது குடும்பத்தின் வளர்ச்சிக்காகத் தான் பாடுபட்டு வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த அத்தனைத் திட்டங்களையும் வெளிப்படையாக ஆதரித்தவர் ராவ். பணமதிப்பிழப்புத் திட்டத்தைக் கூட அவர் பாராட்டினார் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அவரது கட்சியான டி.ஆர்.எஸ்-ஐ, டி.ஆர்.எஸ்.எஸ் என்று பெயர் மாற்றிக் கொள்ள வேண்டும். தனது குடும்பம் தெலங்கானாவை ஆட்சி செய்ய வேண்டும், மோடி டெல்லியில் ஆட்சி செய்ய வேண்டும் என்பது தான் சந்திரசேகர் ராவின் எண்ணம். ஆனால், அவர்கள் இருவருக்கும் நேரம் முடிந்துவிட்டது' என்று பேசினார்.

வரும் டிசம்பர் 7 ஆம் தேதி தெலங்கானாவில் இருக்கும் அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

.