Read in English
This Article is From Oct 03, 2019

பிரியங்கா கூட்டத்தை புறக்கணித்த ரேபரேலி தொகுதி காங். எம்.எல்.ஏ! - பாஜகவுக்கு தாவ திட்டம்?

அதீதி சிங்கின் இந்த செயல் அவர் விரைவில் பாஜகவுக்கு கட்சி தாவ உள்ளதை காட்டுகிறது என தகவல்கள் கூறுகின்றன. எனினும், அதீதி இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Advertisement
இந்தியா Edited by
Lucknow:

உத்தர பிரேதசத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ அதீதி சிங், பிரியங்கா காந்தியின் கூட்டத்தை புறக்கணித்து சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்றது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி, சிறப்பு சட்டமன்ற கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தை எதிர்கட்சியனர் அனைவரும் கூட்டாக புறக்கணிக்க திட்டமிட்டிருந்த நிலையிலும், ரேபரேலி தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ அதீதி சிங் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

ரேபரேலி தொகுதியானது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மாநிலளங்களவை தொகுதியாகும். இந்த தொகுதியின் எம்எல்ஏவாக அதீதி சிங் இருந்து வருகிறார். இவருடைய தந்தை அகிலேஷ் சிங் காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். 

மேலும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு நெருக்கமானவராகவும் அதீதி இருந்து வந்துள்ளார். இப்படி இருக்கும் போது, பிரியங்கா காந்தியின் கூட்டத்தில் பங்கேற்காமல் அவர் சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்க சென்றது காங்கிரஸ் கட்சியனருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

அதீதி சிங்கின் இந்த செயல் அவர் விரைவில் பாஜகவுக்கு கட்சி தாவ உள்ளதை காட்டுகிறது என தகவல்கள் கூறுகின்றன. எனினும், அதீதி இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

ரேபரேலி தொகுதியில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், 2 தொகுதிகள் காங்கிரஸ் வசமும், 2 தொகுதிகள் பாஜக வசமும் உள்ளன. மேலும் ஒரு தொகுதி சமாஜ்வாதி வசம் உள்ளது. 

Advertisement

உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற ஒரே ஒரு தொகுதி ரேபரேலியாகும். இதனால், அதீதி சிங் பாஜகவுக்கு கட்சி தாவும் பட்சத்தில், அது காங்கிரஸூக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.

ஏனெனில், ஏற்கனவே மாநிலங்களவை தேர்தலில் சோனியா காந்தி மிக குறைவான வாக்கு வித்தியாசத்திலே ரேபரேலி தொகுதியை கைப்பற்றியுள்ளார். 

உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியோ, எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிர்தி இரானியிடம் படுதோல்வியை சந்தித்தார். 

Advertisement