हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 16, 2019

விமானத்தில் புறப்பட இருந்த கர்நாடக ‘மாஜி’ காங். தலைவர்; முதல்வர் உத்தரவால் தடுத்து நிறுத்தம்!

கர்நாடகாவில் ஆளும் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது.

Advertisement
Karnataka Edited by
Bengaluru:

கர்நாடக காங்கிரஸிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளவர் ரோஷன் பெய்க். சஸ்பெண்டு செய்யப்படுவதற்கு முன்னர், மாநில காங்கிரஸின் முக்கிய நிர்வாகியாக ரோஷன் இருந்தார். அவர் நேற்று பெங்களூருவிலிருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட இருந்தார். அப்போது, பல கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாகக் கூறி ரோஷன் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த நடவடிக்கை குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்திருந்தார். ரோஷன் கைது செய்யப்படும்போது, பாஜக எம்.எல்.ஏ ஒருவரும் உடனிருந்ததாகவும், அதுவே மாநிலத்தில் நடக்கும் அரசியல் குழப்பங்களுக்கு சாட்சியாக திகழ்கிறது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். 

“இன்று பெங்களூரு விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு சிறப்பு விமானம் மூலம், எடியூரப்பாவின் நெருங்கிய கூட்டாளி பி.ஏ.சந்தோஷுடன் புறப்பட இருந்தார் ரோஷன் பெய்க். இந்நிலையில் ஐ.எம்.ஏ பணமோசடி வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வு அமைப்பு, ரோஷனை தடுத்து நிறுத்தி விசாரணையில் ஈடுபட்டது. புலனாய்வு அதிகாரிகளைப் பார்த்தவுடன் சந்தோஷ், அந்த இடத்திலிருந்து ஓடிவிட்டதாகவும், ரோஷனிடம் விசாரணை செய்ததாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எம்.ஏ வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு பாஜக, உதவி செய்வது வெட்கக் கேடானது. மாநிலத்தில் ஆட்சி புரிந்து வரும் அரசைக் கவிழ்க்க பாஜக குதிரைபேரத்தில் ஈடுபடுவதை இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது” என்று ட்விட்டர் மூலம் முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். 
 

கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா கடிதம் அளித்த நிலையில், அம்முடிவை சபாநாயகர் ஏற்க உத்தரவிடுமாறு கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Advertisement

கர்நாடகாவில் ஆளும் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. ஆளும் இந்த இரு கட்சிகளை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதேபோல், 2 சுயேட்சை எம்.எல்.ஏ-க்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 

இவர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் வழங்கியுள்ளனர். எனினும், இந்த ராஜினாமா முடிவு குறித்து சபாநாயகர் தற்போது வரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். இந்நிலையில், தங்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க உத்தரடவிடக் கோரி 16 எம்.எல்.ஏ-க்களும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கர்நாடக அரசின் ஸ்திரத்தன்மையை சோதிக்கும் வகையில், வரும் வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. 

Advertisement

இப்படிப்பட்ட நேரத்தில்தான் ரோஷன் குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளன. இது குறித்து கர்நாடக பாஜக, “ரோஷன் பெய்க் உடன், பி.ஏ. சந்தோஷ் பயணம் செய்தார் என்ற தகவல் பொய்யானது. முதல்வர் தவறான செய்திகளைத் தந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். இதை உறுதி செய்ய சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் போர்டிங் பாஸ்களை சோதனை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளது. 

Advertisement