Read in English বাংলায় পড়ুন
This Article is From Nov 08, 2018

ம.பி.யில் நான்காம் கட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 2003லிருந்து ஆட்சிக்கு வரவில்லை. அங்கு பாஜக கட்சி நான்காவது முறை ஆட்சி அமைக்கும் முயற்சியில் செயல்பட்டு வருகிறது .

Advertisement
இந்தியா

காங்கிரஸ் கட்சி ம.பியில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நவம்.3ல் வெளியிட்டது.

New Delhi:

புதன்கிழமையன்று காங்கிரஸ் தங்கள் கட்சியின் சார்பாக மத்திய பிரதேசத்தில் போட்டியிடும், 29 பேர் அடங்கிய நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 213 ஆகும்.

நவ.28ஆம் தேதிக்கான 29 வேட்பாளர்கள் நேற்று முடிவு செய்யப்பட்டார்கள். காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நவம்.3இல் வெளியிட்டது 46 எம்.எல்.ஏக்கள் மறு நியமனம் செய்யப்பட்டார்கள். அதன் பின் ஒருநாள் கழித்து 16பேர் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து, திங்களன்று இரவு 13 பேரைக் கொண்ட மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. மீதமிருக்கும் 17 வேட்பாளர்கள் குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. தற்போது காங்கிரஸில் 57 எம்.எல்.ஏக்கள் உள்ளன.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 2003லிருந்து ஆட்சிக்கு வரவில்லை. அங்கு பாஜக கட்சி நான்காவது முறை ஆட்சி அமைக்கும் முயற்சியில் செயல்பட்டு வருகிறது.

Advertisement
Advertisement