Read in English বাংলায় পড়ুন
This Article is From Jul 05, 2018

மனைவி தற்கொலை வழக்கு சசி தரூருக்கு முன்ஜாமின் கிடைத்தது

3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட ஒரே ஒருவர் சசி தரூர்

Advertisement
இந்தியா
New Delhi:

காங்கிரஸ் கட்சியின் தலைவரான சசிதரூருக்கு, மனைவி சுனந்தா புஷ்கர் தற்கொலை வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்டது. சசி தரூர் மீது குற்றம்சாட்ட தேவையான ஆதாரங்கள் இந்த வழக்கில் இருப்பதாக நீதிமன்றம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

சில நிபந்தனைகளுடன் சசி தரூருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது. வெளிநாட்டுக்கு செல்ல கூடாது மற்றும் 1 லட்சம் ரூபாய் சூரிட்டி கொடுக்க வேண்டுமென்றும் கூறியுள்ளது.

சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதற்கு சில நாட்களுக்கு முன், பாகிஸ்தானிய பத்திரிகையாளருடன் தொடர்பு வைத்திருப்பதாக சமூக ஊடகங்களில் அவரது கணவர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

"சுனந்தாவின் மரணத்திற்கு முந்தைய நாளில் இருந்து அவரது போன் அழைப்புகளை, சசி தரூர் முழுமையாக தவிர்த்த்துள்ளார்” என்று விசாரணை அதிகாரிகள் கூறுகின்றானர்.

சுனந்தா புஷ்கர் அவரை தொடர்பு கொள்ள சமூக ஊடகங்கள் மூலம் முயற்சி செய்துள்ளார். ஆனால் அதையும் சசி தரூர் புறக்கணித்துவிட்டார் ,என குற்றப்பத்திரிக்கை கூறுகிறது.

தாரூருக்கு, சுனந்தா அனுப்பிய இ-மெயிலில் "நான் வாழ விரும்பவில்லை , நான் இறக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்" என்று எழுதியிருந்ததாக, விசாரணை அதிகாரிகள் கூறினர்.

அவரது கடைசி இ-மெயில் மற்றும் சமூக ஊடக பதிவுகளை அவரது மரண அறிவிப்பாக எடுத்துக் கொண்டதாக போலீசார் கூறினர்.

3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட ஒரே ஒருவர் சசி தரூர் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்யாமல், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்படி செய்யும் போது முன் ஜாமீன் வழங்குவதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது என்று சசி தரூர் தரப்பில் வாதிடப்பட்டது.

" இந்த குற்றச்சாட்டுகள் அபத்தமானது, அடிப்படை ஆதாரமில்லாதது. பழிவாங்கும் நோக்கில் ஜோடிக்கப்பட்ட வழக்கு” என்று தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் சசி தரூர்.

Advertisement