''அமெரிக்க அதிபரின் பேச்சு அநாகரிகமானதாக உள்ளது. இந்திய பிரதமரை இப்படி விமர்சிப்பது ஏற்புடையது அல்ல"
New Delhi: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆப்கானிஸ்தானில் இந்திய பிரதமர் நூலகம் கட்டுவோம் என்று கூறியதற்கு ட்ரம்ப் அளித்துள்ள பதில் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு நிகழ்வில் ''பிரதமர் மோடி என்னிடம் ஆப்கானிஸ்தானில் நூலகம் கட்டுவேன் என்று கூறிக்கொண்டே இருக்கிறார். ஆனால் எனக்கு ஒரே ஒரு கேள்விதான் அதனை யார் பயன்படுத்த போகிறார்கள்'' என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபரின் இந்தக் கருத்துக்காக காங்கிரஸ் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. "என்னதான் இங்கு பாஜகவும், காங்கிரஸும் எதிரிகளாக இருந்தாலும் ஒரு நாட்டின் பிரதமரை இப்படி அமெரிக்க அதிபர் விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது" என்று கூறியுள்ளது.
இந்தியா, ஆப்கானிஸ்தானில் மேம்பாட்டு பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்திவருகிறது. இது குறித்து பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது பட்டேல் ''அமெரிக்க அதிபரின் பேச்சு அநாகரிகமானதாக உள்ளது. இந்திய பிரதமரை இப்படி விமர்சிப்பது ஏற்புடையது அல்ல" என்று கூறியுள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ரந்தீப் சுர்ஜேவாலாவும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். மேலும் "மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்திலும் நாம் ஆப்கானுக்கு உதவியிருக்கிறோம்" என்றார்.
"டொனால்ட் ட்ரம்ப் இதுபோன்ற கருத்துகளை ட்விட்டரில் தெரிவிப்பது, அவர் யாருக்கும் அடங்காத அநாகரிகமான தனத்தை காட்டுகிறது" என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.