Read in English
This Article is From Jul 25, 2018

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது உரிமை மீறல் தீர்மானம்: காங்கிரஸ்

பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது காங்கிரஸ் உரிமை மீறல் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளது

Advertisement
இந்தியா
New Delhi:

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய அன்று, மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது.

அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

அப்போது, பிரான்ஸ் அதிபர் உடனான சந்திப்பு குறித்தும், ரஃபேல் ஒப்பந்தம் குறித்தும் நாடாளுமன்றத்தில் பேசினார். இதற்கு பதிலளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரஃபேல் ஒப்பந்தம் மிகவும் ரகசியமானது. அதனால் அதனை வெளியில் சொல்ல இயலாது என்று பதிலளித்தார்.

இந்த விவகாரத்தில் தவறான தகவலைக் கூறி அவையை தவறாக வழிநடத்தியாக ராகுல் மீது உரிமை மீறல் தீர்மானத்தை பாஜக கொண்டுவந்தது.

Advertisement

இந்நிலையில், ரஃபேல் விவகாரத்தில் தவறான தகவல்களை கூறி நாடாளுமன்றத்தை தவறான பாதையில் நடத்துவதாக, பிரதமர் மோடி , அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டுவர காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனை காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

Advertisement