இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸுடன் தோழமையாக இருக்கும் எதிர்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது
Bhopal: சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் நிலைக்கு வந்தது. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் முறையே அஷோக் கெலோட் மற்றும் கமல்நாத் ஆகியோர் முதல்வராக பதவியேற்றுற்றனர். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸுடன் தோழமையாக இருக்கும் எதிர்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாயாவதி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.
10 முக்கியத் தகவல்கள்:
1.ராஜஸ்தானில் இன்று 10 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. அதில் அஷோக் கெலோட் முதல்ராகவும், சச்சின் பைலட் துணை முதல்வராகவும் பதவி ஏற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, கமல்நாத் இன்று மதியம் 2 மணி அளவில் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
2. மாலை 4 மணிக்கு புபேஷ் பாகல் சத்தீஸ்கரில் முதல்வர் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.
3.இந்த மூன்று பதவியேற்பு நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கலந்து கொள்வார். அதேபோல, 3 நிகழ்ச்சிகளிலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
4.அதேபோல, ஃபரூக் அப்துல்லா, கர்நாடக முதல்வர் குமாரசாமி, பீகார் எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் பதவியேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5.மேலும், ராஜஸ்தான் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், பல ஆண்டுகளாக மோதல் போக்கைக் கடைபிடித்து வந்த காங்கிரஸும் ஆம் ஆத்மியும் ஒன்று சேரும் என்று நம்பப்படுகிறது.
6.திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் மத்திய பிரதேச பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகி தினேஷ் திரிவேதி கலந்து கொண்டார்.
7.பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, பதவியேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்தார். அவர் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்கு உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
8.மாயாவதி, மம்தா மற்றும் அகிலேஷ் ஆகியோர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காதது பெரும் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
9.நேற்று சென்னையில் நடந்த கருணாநிதியின் சிலைத் திறப்பு விழாவில், திமுக தலைவர் ஸ்டாலின், ராகுலை பிரதமராக முன் மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
10.சென்ற வாரம் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றது. மிசோரம் மற்றும் தெலங்கானாவில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. அதே நேரத்தில் பாஜக தரப்பு, ஒரு மாநிலத்தில் கூட ஆட்சியமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.