This Article is From Nov 06, 2018

கர்நாடகா இடைத் தேர்தல்: பாஜக கோட்டையான பெல்லாரியில் காங்கிரஸ் வெற்றி!

பாஜக சார்பில் கட்சியின் மூத்த தலைவர் ஸ்ரீராமுலுவின் தங்கை சாந்தா இந்த முறை பெல்லாரியில் போட்டியிட்டுள்ளார்

கர்நாடகா இடைத் தேர்தல்: பாஜக கோட்டையான பெல்லாரியில் காங்கிரஸ் வெற்றி!

ரெட்டி சகோதரர்கள் கோலோச்சும் தொகுதியாக கருதப்பட்டு வந்த பெல்லாரியில், 2004 முதல் பாஜக தான் வெற்றி பெற்று வந்தது

Bengaluru:

கர்நாடகாவில் இன்று 3 லோக்சபா தொகுதிகள், 2 சட்டமன்ற தொகுதிகள் இடைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இடைத் தேர்தலின் முடிவுகள் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மககளவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று நம்பப்படுகிறது. லோக்சபா தொகுதியான பெல்லாரி, பாஜக கோட்டையாக கருதப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

ரெட்டி சகோதரர்கள் கோலோச்சும் தொகுதியாக கருதப்பட்டு வந்த பெல்லாரியில், 2004 முதல் பாஜக தான் வெற்றி பெற்று வந்தது. ஆனால் இன்றைய தேர்தலில் காங்கிரஸின் வி.எஸ்.உகரப்பா, பாஜக-வின் சாந்தாவை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 
 

1m4doua8

பாஜக சார்பில் கட்சியின் மூத்த தலைவர் ஸ்ரீராமுலுவின் தங்கை சாந்தா இந்த முறை பெல்லாரியில் போட்டியிட்டுள்ளார். ஸ்ரீராமுலு இந்தத் தொகுதியிலிருந்து எம்.பி ஆக பொறுப்பேற்றிருந்தார். அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவே, இடைத் தேர்தல் நடத்தும் சூழல் உருவானது. 

பெல்லாரி பகுதியில் 8 சட்டமன்ற தொகுதிகல் இருக்கின்றன. கடைசியாக நடந்த தேர்தலில் இந்த 8-ல் 6 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 

பெல்லாரி தொகுதியின் வெற்றி காங்கிரஸின் மூத்த தலைவர் சிவக்குமாரையும் சோதிக்கும். காரணம், இவர் தான் மஜத - காங்கிரஸ் இடையில் கூட்டணி உருவாக முக்கிய பங்காற்றினார். பெல்லாரி பிரசாரத்துக்கும் இவர் தான் கட்சி சார்பில் தலைமை வகித்தார்.

1999 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸின் சோனியா காந்தியும், பாஜக-வின் சுஷ்மா சுவராஜும் பெல்லாரியிலிருந்து போட்டியிட்டனர். அப்போது சோனியா வெற்றி பெற்றார். 

லோக்சபா தொகுதிகளான சிவமுகா, பெல்லாரி, மாண்டியா ஆகியவற்றுக்கும், சட்டமன்ற தொகுதிகளான ஜமகாண்டி மற்றும் ராமநகரா ஆகியவற்றுக்கும் இன்று இடைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. மூன்று லோக்சபா தொகுதிகளில் இரண்டு பாஜக வசமும், 1 மதச்சார்பற்ற ஜனதா தளம் வசமும் இருந்தது. இன்றைய இடைத் தேர்தல் முடிவுகள், இரு தரப்புக்கும் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 
 

.