Read in English
This Article is From Oct 26, 2018

மனோகர் பாரிக்கரின் உடல்நிலை குறித்த வீடியோவை வெளியிட வேண்டும் - காங்கிரஸ் கோரிக்கை

மனோகர் பாரிக்கரின் உடல்நிலை குறித்த தகவலை அரசு வெளியிட வேண்டுமென்று கோரி, நீதிமன்றத்தை நாட போவதாக காங்கிரஸ் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
நகரங்கள்

கோவா மாநில முதலமைச்சர் பாரிக்கர் மும்பை, நியூயார்க் மற்றும் டெல்லியில் கல்லீரல் நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார்

Panaji:

பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆட்சி புரியும் கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டு 8 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். அக்.14 ஆம் தேதிக்கு பிறகு அவரை பொது இடங்களில் பார்க்க முடியவில்லை. இதனால், மனோகர் பாரிக்கரின் உடல்நிலை ஆட்சிபுரியும் நிலையில் உள்ளதா என்பதை உறுதி படுத்த மருத்துவ ஆதாரத்தை வெளியிட வேண்டுமென்று காங்கிரஸ் கோரி வருகிறது.

பானாஜியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜிதேந்திர தேஷ்பிரபு பேசுகையில், எதிர்க்கட்சி சார்பில் கோவா மாநில முதலமைச்சரின் உடல்நிலை குறித்த ஆதாரத்தை வெளியிட கோரி நீதிமன்றத்தை அணுக போவதாக கூறினார்.

மேலும், மருத்துவ அறிக்கையோ அல்லது பாரிகரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் விளக்கமோ தேவையில்லை. மாறாக, முதலமைச்சர் நடப்பதையும், பேசுவதையும் வீடியோவாக வெளியிட்டால் போதுமென்று தேஷ்பிரபு கூறினார்.

Advertisement

கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் கோவாவில் அரசியல் தலைவரின்றி வெற்றிடம் உருவாகியுள்ளது. எதிர்கட்சிகளும் கோவா முதலமைச்சர் பதவியை விடுத்து மனோகர் பாரிக்கர் சிகிச்சை மேற்கொள்ளவே வலியுறுத்துகின்றனர்.

அக்.14ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பின் ஒருமுறை கூட பொது இடங்களில் அவரை காண முடியவில்லை. தற்போது அவர் தனது வீட்டில் 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement