Read in English
This Article is From Jun 19, 2020

மாநிலங்களவை எம்.பி. தேர்தல் : ம.பி.யில் பாஜக, ராஜஸ்தானில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி

மக்களவையில் பாஜக பெரும்பான்மையாக உள்ளது. மாநிங்களவையில் அக்கட்சியின் தலைமையில் அமைந்திருக்கு ம தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை இல்லை.  இன்னும் 30 உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்தால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் மசோதாக்களை எளிதாக  நிறைவேற்றி விட முடியும். 

Advertisement
இந்தியா

நாடு முழுவதும் 10  மாநிலங்களில் காலியாகும் 24 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. 

New Delhi:

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் மத்திய பிரதேசத்தில் பாஜகவும், ராஜஸ்தானில் காங்கிரசும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 

நாடு முழுவதும் 10  மாநிலங்களில் காலியாகும் 24 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. 

குஜராத், ஆந்திரா, கர்நாடகாவில் தலா 4, மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் தலா 3, ஜார்க்கண்டில் 2, மேகாலயா, மணிப்பூர், அருணாசல பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடங்கள் என மொத்தம் 24 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. 

குறிப்பாக குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி காணப்பட்டது.

Advertisement

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் 3 இடங்களில் பாஜக 2 இடங்களிலும், ராஜஸ்தானின் 3 இடங்களில் காங்கிரஸ் 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால்,  நிரஜ் டாங்கி ஆகியோரும், பாஜகவின் ராஜேந்திர கெலாட்டும் வெற்றி பெற்று மாநிலங்களவைக்கு செல்கின்றனர். 

Advertisement

மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் சுமேர் சிங் சோலங்கி ஆகியோர் பாஜக தரப்பிலும், திக் விஜய சிங் காங்கிரஸ் சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். 