Read in English
This Article is From Dec 24, 2018

ஜார்க்கண்ட் இடைத்தேர்தலில் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி

காங்கிரஸ் வேட்பாளர் நமன் பிக்ஸால் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பசந்த் சோரங்கை விட 9 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement
இந்தியா

முதல் ரவுண்டில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்று வந்தார்.

Ranchi:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ள சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இங்கு கோல்பிரா சட்டசபை தொகுதியின் உறுப்பினராக முன்னாள் அமைச்சர் எனோஸ் எக்கா இருந்து வந்தார்.

ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவரது உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து, கோல்பிரா தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ், பாஜக உள்பட 5 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

இங்கு கடந்த 20-ம்தேதி வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கோல்பிரா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கொங்காரி 40,343 வாக்குகளை பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் பசந்த் சோரங்கிற்கு 30,685 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

இதன் மூலம் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். முன்பு இதே தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த எனோஸ் எக்காவுக்கு 16,445 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

Advertisement

மதசார்பற்ற அரசியலுக்கு கிடைத்த வெற்றி என்றும், மக்கள் பாஜகவை புறக்கணிக்கத் தொடங்கி விட்டதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement