This Article is From Jun 02, 2019

நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்தபின்; காங்கிரஸ் திவ்யா ஸ்பந்தனா ட்விட்டரை விட்டு விலகினார்

காங்கிரச் ஊடக அமைப்பு, திவ்யா ஸ்பந்தனாவின் ட்விட்டர் கணக்கு ஏன் மூடப்பட்டது என்ற கேள்விக்கு எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை.

நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்தபின்; காங்கிரஸ் திவ்யா ஸ்பந்தனா ட்விட்டரை விட்டு விலகினார்
New Delhi:

காங்கிரஸ் செய்திதொடர்பாளர் திவ்யா ஸ்பந்தான ட்விட்டர் இல்லை. பாஜக தலைவர் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பதவியேற்றபோது அவருக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் முதல் பெண் நிதியமைச்சர் என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். 1970 ஆம் ஆண்டுகளில் நிதியமைச்சகத்தை இந்திரா காந்தி வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் தொலைக்காட்சி விவாதங்களி ஒரு மாதம் பங்கேற்க கூடாது காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்திருந்தார்.

காங்கிரச் ஊடக அமைப்பு, திவ்யா ஸ்பந்தனாவின் ட்விட்டர் கணக்கு ஏன் மூடப்பட்டது என்ற கேள்விக்கு  எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை.

ao4nb4sg

திவ்யா ஸ்பந்தனாவில் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம்.

தேசிய தேர்தலில் கட்சியின் மோசமான செயல் திட்டம் காரணமாக காங்கிரஸின் சமூக ஊடக குழுவிலிருந்து பிரிந்து விட்டாரா என்பது பற்றி கேட்டதற்கு உங்களின் தகவலின் ஆதாரம் தவறானது என்று கூறினார்.

பாஜகவின் சமூக ஊடகங்களுக்கு இணையாக காங்கிரஸின் சமூக ஊடக பக்கங்களை இனி உருவாக்குவதற்கான முன்னெடுப்பாக இது  இருக்கும் எனத் தெரிகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி பெருமளவில் சரிவை எதிர்கொண்ட நிலையில் பொருளாதாரத்தை புதுப்பிக்க உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள் அதுவே எங்கள் விருப்பம் என்று காங்கிரஸ் தலைவர் ட்விட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

.