Read in English
This Article is From Apr 25, 2020

Zoom அழைப்பில் மத்திய அரசை சாடிய காங்கிரஸ் முக்கியப் புள்ளிகள்… என்ன சொன்னார்கள்?

நாடாளுமன்ற வளாகம் உட்பட டெல்லியில் உள்ள பல கட்டுமானங்களை மறுக்கட்டமைப்பு செய்யும் நோக்கில் 20,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

மும்மை - குஜராத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்திற்கு 5,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Highlights

  • சமீபத்தில் மத்திய அரசு,அதன் ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்தியது
  • கொரோனாவை காரணம் காட்டி இந்நடவடிக்கையை எடுத்தது மத்திய அரசு
  • மத்திய அரசின் இந்நடவடிக்கையை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது
New Delhi:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸின் முக்கியப் புள்ளியான ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் Zoom கான்ஃபரென்ஸ் அழைப்பு மூலம், மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளனர். மத்திய அரசு சமீபத்தில், தன் ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது. அரசின் இந்த முடிவைத்தான் காங்கிரஸ் நிர்வாகிகள் சாடியுள்ளனர். 

“தற்போது இருக்கும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இதைப் போன்ற கஷ்டத்தைக் கொடுக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்,” என மன்மோகன் சிங் கூறியுள்ளார். 

இதற்கு ராகுல் காந்தி, “டெல்லியை அழுகப்படுத்த அவர்கள் மிகப் பெரும் நிதியை ஒதுக்கியுள்ளார்கள். நடுத்தர மக்கள் கையிலிருக்கும் பணத்தை எடுத்து ஏழைகளுக்குக் கொடுக்காமல் இதைப் போல ஆடம்பர செலவுகளுக்குக் கொடுக்கிறது இந்த மத்திய அரசு,” என்று சாடினார். 

மத்திய அரசு தரப்பில் இது குறித்து  வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கொரோனா பாதிப்பு காரணமாக சுகாதாரத்துறை மற்றும் சமூகத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு தரப்பு மக்களின் நலனுக்காக கூடுதல் நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 2020 முதல் ஜூலை 2021 வரையிலான அகவிலைப்படி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Advertisement

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அகவிலைப்படியின்படி தொகை வழங்கப்படும். இந்த நடவடிக்கையால் நடப்பு நிதியாண்டில் ரூ. 37,350 கோடி அளவுக்கு மிச்சம் ஏற்படும்' எனத் தெரிவிக்கப்பட்டது. 

இந்த விவகாரம் பற்றி ப.சிதம்பரம், “புல்லட் ரயில் திட்டம், டெல்லியை அழகப்படுத்தும் திட்டம் உள்ளிட்டவைகளுக்குத்தான் முதலில் தற்காலிக முடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதன் பிறகுதான் அகவிலைப்படி உயர்வு பற்றி யோசித்திருக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார். 

Advertisement

நாடாளுமன்ற வளாகம் உட்பட டெல்லியில் உள்ள பல கட்டுமானங்களை மறுக்கட்டமைப்பு செய்யும் நோக்கில் 20,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, மும்மை - குஜராத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்திற்கு 5,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement