This Article is From Oct 23, 2018

தாயாரைக் காண விடுப்பு தராததால் விஷம் குடித்த போலீஸ் கான்ஸ்டபிள்

உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தாயாரை பார்க்க விடுப்பு தராததால், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் விஷம் குடித்துள்ளார்

தாயாரைக் காண விடுப்பு தராததால் விஷம் குடித்த போலீஸ் கான்ஸ்டபிள்

தசரா பண்டிகை பாதுகாப்பு காரணமாக கான்ஸ்டபிளுக்கு விடுப்பு தவிர்க்கப்பட்டது.

Banda:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்ஸ்டபிள் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தாயாரை பார்க்க விடுப்பு தராததால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் பண்டா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள மார்தான் நகா காவல் நிலையத்தில் தலைமை காவலராக அருண் குமார் வர்மா என்பவர் இருந்து வருகிறார். தசரா பண்டிகை பாதுகாப்பு காரணமாக அவருக்கு கூடுதல் பணி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தாயாரை பார்ப்பதற்கு அருண் குமார் விடுப்பு கேட்டுள்ளார். தசரா பண்டிகையை காரணம் காட்டி அவருக்கு விடுப்பு வழங்கப்படவில்லை.

இதையடுத்து அருண் குமார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை முடிந்ததும் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

.