சண்டிகரில் நடந்த ராணுவ கருத்தரங்கில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ அதிகாரி லெஃப்டினனெட் ஜெனரல் டிஎஸ் ஹூடா இப்படி பேசியுள்ளார்.
Chandigarh: சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது குறித்து முதலில் பெருமைப்பட்டது சரிதான். ஆனால் அது குறித்து தொடர்ந்து பேசி வருவது சரியல்ல என்று, ஆபரேஷன் நடக்கும் போது, அதை கண்காணித்த முன்னாள் ராணுவ அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார்.
சண்டிகரில் நடந்த ராணுவ கருத்தரங்கில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ அதிகாரி லெஃப்டினனெட் ஜெனரல் டிஎஸ் ஹூடா, ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது. அது ராணுவம் சார்ந்த நடவடிக்கை. அது நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், அது இப்போது ஆகியிருப்பது போன்று அரசியலாக்கப்பட்டிருக்க வேண்டுமா. அது குறித்து சரியா தவறா என்று அரசியல்வாதிகள்தான் முடிவெடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
உரியில் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடந்ததை அடுத்து, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சர்ஜிக்கல் ஸ்டிரைக், பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் சம்பவத்தை, நேரலையில் ஹூடா பார்த்திருக்கிறார்.
இந்திய எல்லைக்குள் வருவதற்காக, பாகிஸ்தான் எல்லையில் முகாமிட்டிருந்த தீவிரவாதிகள் பலர் இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது குறித்து மத்திய அரசு, தொடர்ந்து பெருமையாக பேசி வருகிறது. அதை விமர்சிக்கும் வகையில் தான் ஹூடா பேசியுள்ளார்.