This Article is From Feb 20, 2020

திருப்பூர் விபத்து: பயணிகளின் உறவினர்கள் தொடர்புகொள்ள அவசர உதவி எண் அறிவிப்பு!

தொடர்ந்து, விபத்தில் பலியானவர்களின் உடலை அடையாளம் காணும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Edited by

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரிலிருந்து  திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும், கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.  

இந்த கோர விபத்தில், 3 பெண்கள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் கூறும்போது, கர்நாடகாவின் பெங்களூர் பகுதியிலிருந்து எர்ணாகுளம் நோக்கி வந்து கொண்டிருந்த கேரள மாநில சொகுசு பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். 

Advertisement

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக காட்சிகளில், பேருந்தின் வலது புறம் முற்றிலும் சிதைந்துள்ளது. கண்டெயனர் லாரியின் டயர் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிவேகமாகச் சென்ற லாரியின் டயர் வெடித்ததைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்து மீது மோதியதாகத் தெரிகிறது. 

Advertisement

இது சம்பந்தமாக அனைத்து நிவாரண நடவடிக்கைகளும் தமிழக அரசு மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும்" என்று முதல்வர் பினராயி விஜயன் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, விபத்தில் பலியானவர்களின் உடலை அடையாளம் காணும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளிக்கப் பாலக்காடு மாவட்ட ஆட்சியரை நிகழ்விடத்திற்கு செல்லுமாறு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.  

இந்த நிலையில்,  இந்த விபத்து குறித்து பயணிகளின் உறவினர்கள் தொடர்புகொள்ளுவதற்காக 7708331194 என்ற அவசர உதவி எண்ணை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement