This Article is From Aug 29, 2019

'மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்' - காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா கருத்து!!

ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். காஷ்மீர் விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement
இந்தியா ,

காஷ்மீர் விவகாரத்தில் மோடியின் நடவடிக்கையை அமெரிக்கா பாராட்டியுள்ளது.

New Delhi:

கைது நடவடிக்கைகள், குடியிருப்பு பகுதியில் ராணுவ குவிப்பு உள்ளிட்டவை கவலை அளிப்பதாகவும், மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. 

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்காவின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் மார்கன் ஆர்டாகஸ் கூறியதாவது-

ஜம்மு காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அமெரிக்கா கவனித்து வருகிறது. கைது நடவடிக்கைகளும், குடியிருப்ப பகுதியில் விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகளும் கவலை அளிக்கின்றன. 

மனித உரிமைகளுகளுக்கு மதிப்பு அளிக்கப்பட வேண்டும். இணக்கமான முறையில் சட்டங்களுக்கு உட்பட்டு இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். 

Advertisement

இந்திய எல்லையில் அமைதி நிலை நிறுத்தப்பட வேண்டும். அதற்காக எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்கள் தடுக்கப்பட வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார். 

ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் சந்தித்து பேசினர். அப்போது 1947-க்கு முன்பு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாகத்தான் இருந்தன. அனைத்து பிரச்னைகளும் இரு நாடுகளுக்கு உட்பட்டவைதான். இதில் மூன்றாவது நாடு தலையிட உரிமையில்லை என்று ட்ரம்பிடம் மோடி தெரிவித்தார். 

Advertisement
Advertisement