Read in English
This Article is From Nov 01, 2018

“சட்டம் தேவையில்லை; ஓட்டெடுப்பே போதும்” – குடியுரிமை விஷயத்தில் அத்துமீறும் ட்ரம்ப்

அமெரிக்காவில் பிறந்த மற்ற நாட்டினரது குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடையாது என்று ட்ரம்ப் சட்டம் கொண்டுவரவுள்ளார் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Advertisement
உலகம்

தேர்தலுக்கு பிரசாரம் செய்தபோது, மற்ற நாட்டு தம்பதியினரின் குழந்தைகள் குடியுரிமையை பறிக்க வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்தார்.

Washington:

அமெரிக்காவில் பிறந்த மற்ற நாட்டினரது குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடையாது என்று ட்ரம்ப் சட்டம் கொண்டுவரவுள்ளார் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறப்பால் குடியுரிமை என்பது மிகமிக முக்கியமான விஷயம். இதை நான் அழுத்தமாக வலியுறுத்துகிறேன். இதனை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறேன் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். 

இதற்கு சட்டம் எந்த விதத்திலும் தேவைப்படாது. சட்ட வல்லுனர்களுடனான பேச்சு வார்த்தைக்கு பின் அவையில் எடுக்கும் ஓட்டெடுப்பே இதற்கு போதுமானது என்று வெள்ளை மாளிகை பத்திரிக்கையாளர் சந்திப்பில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

ட்ரம்ப் தனது முடிவில் தீர்க்கமாக இருந்தாலும் அவரது நோக்கம் இதனை அவையில் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றுவதே ஆகும். ஏனேனில் இதனை நிரந்தர சட்டமாக்குவதையே அதிபர் ட்ரம்ப் விரும்புவதாக குடியரசு கட்சியினர் தெரிவித்துள்ளனர். அதற்காக தான் இதனை உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும் அமைப்பாக இருக்க வேண்டும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

Advertisement

உலகிலேயே அமெரிக்காவில் மட்டும் தான், இதுபோன்ற அபத்தமான நடைமுறை அமலில் இருப்பதாக தெரிவித்தார். 85 ஆண்டுகளாக இது தொடர்ந்து வருகிறது. எந்த நாட்டிலிருந்தாவது வருகிறார்கள், குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். குடியுரிமை பெறுகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்துள்ளார்.

இதனைச் சட்ட வல்லுனர்கள் எதிர்த்து வருகின்றனர். 14வது அமெரிக்க சட்டத்திருத்த மசோதாவின் படி ''ஒருசில காரனங்கல் தவிர அமெரிக்காவில் பிறக்கும் அனைவருமே அமெரிக்கர்கள்தான் என்று அமெரிக்க குடியுரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இதையெல்லாம் அறியாமல் அதிபர் பேசிவருகிறார் என்றும் விமர்சித்துள்ளனர். 

Advertisement

ஜனநாயக கட்சியை சேர்ந்த ஷெய்லா ஜாக்ஸன் லீ "ட்ரம்ப்புக்கு இரண்டு வருடங்களாக ஸெனோஃபோபியா எனும் வேற்று நாட்டவரை கண்டால் வரும் வெறுப்பு வந்துள்ளது. மேலும் சகிப்புத்தன்மையற்ற நிலையில் இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

Advertisement