বাংলায় পড়ুন Read in English
This Article is From Jan 30, 2019

''பாஜக தலைவர்களை கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள சொல்லுங்கள்'' - ராஜ்நாத்திடம் சீறிய மம்தா

கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பொதுக் கூட்டத்தை தொடர்ந்து வன்முறை வெடித்தது. இதில் பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. திரிணாமூல் காங்கிரஸ் அலுவலங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

Advertisement
இந்தியா

Highlights

  • நேற்று அமித் ஷா பேரணி நடத்திய பின்னர் வன்முறை வெடித்தது
  • திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டன
  • நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Kolkata:

பாஜக தலைவர்களை கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள சொல்லுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித் ஷா நேற்று பொதுக் கூட்டம் நடத்தினார். இதில், பொன்ஸி ஊழல் விவகாரம் பற்றி பேசிய அமித் ஷா, மம்தா அரசு மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இந்தப் பொதுக்கூட்டம் நடந்து முடிந்த பின்னர் கந்தி என்ற இடத்தில் வன்முறை வெடித்தது.

அப்போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் பஸ்கள் மீது கற்களை வீசினர், மோட்டார் சைக்கிள்களை தீயிட்டு கொளுத்தினர். இதன் தொடர்ச்சியாக திரிணாமூல் காங்கிரஸ் அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. இந்த வன்முறை நேற்று மாலை வரை நீடித்தது.

வன்முறை காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் இந்த விவகாரம் நேற்று மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

Advertisement

இந்த நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது,''உங்கள் தலைவர்களையும், ஆதரவாளர்களையும் தயவு செய்து கட்டுப்பாட்டில் வைத்தக் கொள்ளுங்கள். மேற்கு வங்கத்தில் அமைதியை சீர்குலைக்க அவர்கள் முயல்கிறார்கள்'' என்று கண்டிப்புடன் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 23-யை கைப்பற்ற வேண்டும் என்று பாஜக தலைவர் அமித் ஷா பேசியிருக்கிறார்.

Advertisement
Advertisement