This Article is From Apr 05, 2020

சர்ச்சைக் கருத்து; மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு!!

மாரிதாஸ் மீது நெல்லை காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சர்ச்சைக் கருத்து; மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது மூவாயிரத்தினை கடந்துள்ளது. 77 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நபர்கள் டெல்லி இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்று கூறப்படுகின்றது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலையும் , இஸ்லாமிய இயக்கங்களையும் இணைத்து சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பரப்பியதற்காகப் பிரபல சமூக வலைத்தள பிரமுகரான மாரிதாஸ் மீது நெல்லை காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இவரின் கருத்துகள் பொதுச் சமூகத்தில் மதம் சார்ந்த பிரச்சினையை உருவாக்கும் என பல சமூக ஆர்வலர்கள் விமர்சித்திருந்தனர். இந்த நிலையில் நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது காதர் மீரான் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் தற்போது மாரிதாஸ் மீது நெல்லை காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதற்கு, தன் மீது பதியப்பட்ட வழக்கு உண்மை என்றும், எந்த மத்தின் உள் நம்பிக்கையையும் தான் ஒரு நாளும் காயப்படுத்தியதில்லை. அதற்கான நோக்கமும் எனக்கு இல்லை என்றும் இந்துக்களின் நியாயமான விசயத்திற்குத் தான் குரல் கொடுக்க வந்துள்ளதாகவும் தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.

.