திவ்யா ஸ்பந்தனா பதிவிட்ட டிவிட்டிற்கு பாஜகவினர் மத்தியில் கடும் விமர்சனம் எழுந்தது.
New Delhi: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திவ்யா ஸ்பந்தனா, பிரதமர் நரேந்திர மோடியை தாக்கி தனது டிவிட்டரில் பதிவிட்ட பதிவால் சமூக வலைதளங்களில் அவருக்கு பெரும் கண்டனங்களையும், பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது. இது பாஜகவினரிடம் மட்டும் அல்லாமல் தனது கட்சியினரிடம் இருந்தும் அவருக்கு கண்டனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
காங்கிரஸின் மதிப்புகள் குறைந்து வருகின்றன என பாஜகவினர் கடுமையாக சாடி வருகின்றனர். இதனிடையே காங்கிரஸ் வட்டாரங்களும், பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஸபந்தனாவின் வார்த்தைகளை காங்கிரஸ் ஒரு போதும் சம்மதிக்காது என தெரிவித்து வருகின்றனர்.
திவ்யா ஸ்பந்தனா, குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை பாதத்திற்கு கீழ் பிரதமர் நரேந்திர மோடி நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
திவ்யாவின் டிவிட்டிற்கு பாஜக அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், காங்கிரஸ் கட்சியின் மதிப்புகள் சரிந்து கொண்டிருப்பதை காட்டுகிறது என பதிலடி கொடுக்கப்பட்டது.
தனது கட்சியின் மறுப்பு மூலம் ஏமாற்றமடைந்த திவ்யா ஸ்பந்தனா, தனது அடுத்த டிவிட்டில், என் கருத்துக்கள் என்னுடையவை என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாதத்திலே இரண்டாவது முறையாக சர்ச்சைக்குரிய சூழ்நிலைகளில் திவ்யா ஸ்பந்தனா குறித்து செய்திகள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் சமூக ஊடகப்பிரிவு தலைவராக இருந்து வரும் திவ்யா ஸ்பந்தனா, சமீபத்தில் பிரதமர் மோடியை திருடன் என குறிப்பிட்டு சர்ச்சைக்களை ஏற்படுத்தினார்.
இதனால், திவ்யாவின் பணிகள் குறைக்கப்பட்டதையடுத்து, அவர் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்து வந்தார். இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறும்போது, பிரதமர் மோடியை திருடன் என குறிப்பிட்டு திவ்யா வெளியிட்ட செய்தியால் அவர் மீது ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.