This Article is From Sep 04, 2020

இந்திய-சீன எல்லை பிரச்னை ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும்: ஜெய்சங்கர்

லடாக்கில் எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. சீனாவுடன் எங்களுக்கு ஒப்பந்தங்களும் புரிந்துணர்வுகளும் உள்ளன. ஒப்பந்தங்களும் புரிந்துணர்வுகளும் இரு தரப்பினராலும் கவனமாக கவனிக்கப்பட வேண்டும்

இந்திய-சீன எல்லை பிரச்னை ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும்: ஜெய்சங்கர்

இந்தியா-சீனா உறவில் தற்போதைய காலம் இனிமையானதாக இல்லை: ஜெய்சங்கர்

New Delhi:

இந்தியா-சீனாவுக்கு இடையேயான எல்லை பிரச்னைகளை ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது இணைய வழி புத்தக வெளியிட்டு விழா ஒன்றில் பேசும் போது கூறியுள்ளார்.

சமீபத்தில் கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட இந்திய சீன ராணுவ வீரர்களிடையேயான மோதலில் 20 இந்திய வீரர் உயிரிழந்த சம்பம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்து. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவின் மொபைல் செயலிகளை இந்தியாவிற்குள் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி மறுத்தது.

முன்னதாக சீனா மீண்டும் இந்திய எல்லையில் ஊடுருவ முயன்றதாகவும், அதனை இந்தியா முறியடித்ததாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய-சீன ராணுவத்தின் சமீபத்திய மோதலானது 1962 க்கு பிறகான மோசமான மோதல் என ஜெய்சங்கர் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது, “லடாக்கில் எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. சீனாவுடன் எங்களுக்கு ஒப்பந்தங்களும் புரிந்துணர்வுகளும் உள்ளன. ஒப்பந்தங்களும் புரிந்துணர்வுகளும் இரு தரப்பினராலும் கவனமாக கவனிக்கப்பட வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தற்போதய சூழலில் எல்லை பிரச்னைக்கு இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று நான் முழுமையாக விரும்புகிறேன். எல்லையில் ஏற்படும் பிரச்னைகள் இரு நாட்டு உறவுகளையும் பாதிக்கும்.” என்றும் அவர் கூறியுள்ளார். தற்போதைய சூழ்நிலையின் தீவிரத்தன்மையையோ அல்லது சவால்களையோ தான் குறைத்து மதிப்பிடவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(With inputs from agencies)

.