This Article is From Aug 01, 2019

சிலிண்டர் விலை 62.50 குறைப்பு

இரண்டு மாதங்களில் மானியமற்ற சிலிண்டரின் விலை ரூ. 163 குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Posted by

மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 62.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 62.50 காசுகள் குறைக்கப்பட்டு, ரூ590. 50 காசாக நிர்ணயம் செய்யப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

மானியமற்ற சிலிண்டரின் விலை கடந்த மாதம் ரூ. 100.50 காசுகள் குறைக்கப்பட்டிருந்தது. இரண்டு மாதங்களில் மானியமற்ற சிலிண்டரின் விலை ரூ. 163 குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement