விழுப்புரம் அருகேயுள்ள அன்னியூரில், போலீஸ் கான்ஸ்டபிள் தன் காதலியை அவரது பிறந்த நாளன்று சுட்டுக் கொன்றுள்ளார். அவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த கொடூர சம்பவம் குறித்து காவல் துறை தரப்பு, ‘சென்னையில் மருத்துவம் படித்து வரும் சரஸ்வதியும், தமிழக காவல் துறையில் கான்ஸ்டபிளாக இருக்கும் கார்த்திக்கும் முகநூல் மூலம் அறிமுகமாகி உள்ளனர். அவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களது உறவில் சமீபத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை, சரஸ்வதியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு, அவரது சொந்த ஊருக்கு சென்றுள்ளார் கார்த்தி. அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது.
இதையடுத்து, கோபமடைந்த கார்த்தி, சரஸ்வதியை சுட்டுக் கொன்றுள்ளார். தானும், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்’ என்று தெரிவித்துள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)