This Article is From Jul 27, 2020

பொம்மை புலியைப் பிடிக்க அரை மணி நேரம் காத்திருந்த போலீசார்!

கரும்புலியைப் பிடிக்க அரை மணி நேரம் காத்திருந்த போலீசார். அடுத்து நடந்த காமெடி சம்பவம்!

பொம்மை புலியைப் பிடிக்க அரை மணி நேரம் காத்திருந்த போலீசார்!

ஹோர்ஷம் போலீசார் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பொம்மைப் புலி படம்.

இங்கிலாந்து பூங்கா ஒன்றில் பொம்மைப் புலியைக் கண்டு போலீசார் மிரண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

இங்கிலாந்தில் உள்ள மேற்கு சசெக்ஸ் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் நள்ளிரவு போலீசார் ரோந்து வந்தனர். அப்போது, பூங்காவின் பெஞ்சில் புலி இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும், நகர்புறத்தில் புலி உலவுவதாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். 

நீண்ட நேரமாக புலியைக் கண்காணித்த போலீசார், அது ஆடாமல் அசையாமல் இருப்பதை உணர்ந்தனர். பின்னர், அதன் அருகில் சென்று பார்த்தப் பிறகுதான் அது புலி இல்லை என்றும், புலி போல் உள்ள பொம்மை என்பதும் புரிந்தது. 

இந்த பொம்மைப் புலியைப் போட்டோ எடுத்த போலீசார், அதனை சமூகவலைதளங்களில் பதவிட்டனர். பார்ப்பதற்கு உண்மையான  கரும்புலி போன்று இருப்பதாகவும், ஆனாலும் போலீசாருக்கு தைரியம் அதிகம்தான் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். 

பூங்காவில் பொம்மை புலி இருப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு கடந்த 2018 ஆம் ஆண்டு, ஸ்காட்லாந்தில் பொம்மைப் புலியைப் பிடிக்க 45 மணி நேரம் காத்திருந்த சம்பவமும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொம்மைப் புலியின் படம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு டுவிட்டரில் வெளியானது. சில நெட்டிசன்கள் கூட இதனை உண்மையான புலி என்று பார்த்த உடனே ஏமார்ந்ததாகவும், பொம்பைப் புலி என்பதை நம்ப முடியவில்லை என்றும் கூறி வருகின்றனர்.

Click for more trending news


.