This Article is From Nov 01, 2018

ரீலா... ரியலா... தேவாலயத்தில் துப்பாக்கி உண்மையில் நடந்தது என்ன?

கிழக்கு ஹாலிவுட்டில் உள்ள தேவாலயத்தில் பெரியளவு துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு மர்ம ஆட்கள் இருப்பதாக தகவல் வந்துள்ளது

ரீலா... ரியலா... தேவாலயத்தில் துப்பாக்கி உண்மையில் நடந்தது என்ன?

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்ஜல்ஸ் போலீஸாருக்கு கிழக்கு ஹாலிவுட்டில் உள்ள தேவாலயத்தில் பெரியளவு துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு மர்ம ஆட்கள் இருப்பதாக தகவல் வந்துள்ளது.

தகவலை அறிந்து அங்கு விரைந்த போலீசார் அது கொள்ளைச்சம்பவம் இல்லை என்றும் போலி துப்பாக்கிளை வைத்து ஒரு பாடல் காட்சியை படமாக்க வந்ததாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தயாரிப்பாளர் பீட்டர் மாந்தானா கூறியது ‘நாங்கள் இங்கு ஒரு பெங்காலி ராப் பாடலுக்கு ஏற்றவாறு காட்சிகளை படமாக்க வந்தோம். மேலும் இன்றைய படப்பிடிப்புக்கு உள்ளுர் மக்களை வைத்துதான் ஷுட்டை நடத்த உள்ளோம் என ஃபாஸ் நீயூஸிடம் தெரிவித்தார்.

ஆனால் போலீசார் தரப்பில் அவர்கள் படப்பிடிப்பு நடத்த உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத காரணத்தால் இச்சம்பவம் குறித்து தங்களுக்கு எவ்வித அறிவிப்பும் இல்லை என்றனர்.

‘நாடு முழுவதும் கடந்த வாரம் நடந்தேரிய சம்பவம் மக்களுக்கு அச்சத்தை உண்டாக்கிய நிலையில், முன்னெச்சரிக்கையாக இதை உண்மையான சம்பவம் போல் விசாரணை நடத்தப்படும், என எல்.ஏ.பி.டி. அதிகாரி கீத் கீரிண் தெரிவித்தார்.

Click for more trending news


.