நொய்டாவில் உள்ள கல்லூரியிலிருந்து வெளியே சென்ற மாணவர், திரும்பி வராததால் போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.
Noida: காஷ்மீரைச் சேர்ந்த 17 வயது மாணவன் நொய்டாவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த நாட்களாக காணாமல் போன அவரை தேடும் பணியை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.
முதலாம் ஆண்டு மாணவனான பிலால் கடந்த வாரம் முதல் செமஸ்டர் தேர்வினை எழுதியுள்ளார். ஞாயிறன்று கல்லூரி நிர்வாகித்தினரிடம் அனுமதி பெற்று டெல்லிக்கு சென்ற அவர் மீண்டும் கல்லூரி திரும்பவில்லை.
அம்மாணவருடைய சகோதர் மற்றும் ஷரதா பல்கலைக்கழக அதிகாரிகள் அருகிலுள்ள காவல் நிலையத்தை அணுகி, புகாரை பதிவு செய்தனர். அதன் பின், பிலாலின் செல்போன் எண்ணை கண்காணித்த மூலம், அவர் ஸ்ரீநகரிலிருந்து கடைசியாக செல்போன் மூலம் திங்களன்று மாலையில் தந்தையிடம் பேசியது கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் அரவிந்த் பதாக் கூறுகையில், பிலாலின் கடைசியாக ஸ்ரீநகரிலிருந்து மாலை 4.30க்கு தந்தையை தொடர்பு கொண்டு பேசியுள்ளாதாக தெரிவித்தார்.
அக்.28ஆம் தேதி பிலால் டெல்லி செல்வதாக கூறி அனுமதி பெற்றார். ஆனால் திங்களன்று காலை வரை அவர் கல்லூரி திரும்பாததால், கல்லூரி நிர்வாக ஸ்ரீநகரில் உள்ள அவரது தந்தை தொடர்பு கொண்டு பேசியதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திங்களன்று மாலையில் பிலாலின் சகோதரர் மற்றும் விடுதி கண்காணிப்பாளர் காவல் நிலையத்தில் புகாரினை பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு செல்போன் எண்ணை கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.
அதன் மூலம், ஞாயிறன்று மதியம் 12 மணியளவில் பிலால் டெல்லியில் இருந்துள்ளார். அதன்பின் மறுநாளான திங்களன்று ஜம்மு காஷ்மீரில் இருந்தது தெரியவந்துள்ளது.
திங்களன்று மாலை 4.30 மணிக்கு தந்தையிடம் பேசிய பிலால், தான் டெல்லி மெட்ரோவில் இருப்பதாகவும் அங்கிருந்து தனது கல்லூரிக்கு செல்லப்போவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், அவருடைய செல்போன் எண்ணை கண்காணித்ததில், காஷ்மீரில் இருந்து கொண்டு டெல்லியில் இருப்பதாக தந்தையிடம் பொய் கூறியது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.