This Article is From May 24, 2020

சென்னையில் 10,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு! முழு விவரம்!!

மே 24 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 9,989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 10,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு! முழு விவரம்!!

தமிழகத்தில் நேற்று 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்ட 759 பேரில் 624 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9,989 ஆக உயர்ந்திருக்கிறது. 363 பேர் நேற்று கொரோனா தொற்று குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலத்தில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை7,491 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 5 பேர் உள்பட தமிழகத்தில் இதுவரையில் 103 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (23.05.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 274

மணலி - 126

மாதவரம் - 213

தண்டையார்ப்பேட்டை - 974

ராயபுரம் – 1,889

திரு.வி.க நகர் - 1,133

அம்பத்தூர் - 415

அண்ணா நகர் - 829

தேனாம்பேட்டை - 1,054

கோடம்பாக்கம் - 1,391

வளசரவாக்கம் - 679

ஆலந்தூர் - 107

 அடையாறு - 533

பெருங்குடி - 152

சோழிங்கநல்லூர் - 160

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 60

மே 24 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 9,989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

.