This Article is From May 24, 2020

தமிழகத்தில் 16,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு!

சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 10 ஆயிரத்தினை கடந்து 10,576 ஆக உள்ளது. 

தமிழகத்தில் 16,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 16,277 ஆக இன்று உயர்ந்துள்ளது. புதியதாக இன்று 765 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டனர். இதில் 587 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இந்நிலையில் சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 10 ஆயிரத்தினை கடந்து 10,576 ஆக உள்ளது. 

இன்று ஒரே நாளில் 833 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 8,324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7,839 பேர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று தொற்று பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டவர்களில் 718 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் 47 பேர் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வந்தவர்களுமாவார்கள்.

இன்றுவரை 4,09,615 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 464 பேர் ஆண்களும், 301 நபர்கள் பெண்களும் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையத்தின் எண்ணிக்கையானது 68 உயர்த்தப்பட்டுள்ளது. இன்று 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 111 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

.