தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு இன்று உச்சம் அடைந்தது.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 67 ஆயிரத்தை கடந்துள்ளது
- பாதிப்பில் சென்னை தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது
- தென் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 865 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 67 ஆயிரத்து 468 ஆக உயர்ந்துள்ளது.
இன்று சென்னையில் மட்டும் 1,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 814 ஆக அதிகரித்துள்ளளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் மொத்தம் 33 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,424 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்ட வாரியான நிலவரங்களை பார்க்கலாம்....
Sl. No | மாவட்டம் | மொத்த பாதிப்பு | குணமானோர் | சிகிச்சை பெறுவோர் | மரணம் |
1 | அரியலூர் | 440 | 390 | 50 | 0 |
2 | செங்கல்பட்டு | 4,202 | 2,316 | 1,825 | 60 |
3 | சென்னை | 45,814 | 26,472 | 18,673 | 668 |
4 | கோவை | 314 | 170 | 142 | 1 |
5 | கடலூர் | 892 | 522 | 365 | 5 |
6 | தர்மபுரி | 45 | 19 | 26 | 0 |
7 | திண்டுக்கர் | 367 | 224 | 139 | 4 |
8 | ஈரோடு | 89 | 72 | 15 | 2 |
9 | கள்ளக்குறிச்சி | 448 | 325 | 122 | 1 |
10 | காஞ்சீபுரம் | 1,375 | 647 | 711 | 17 |
11 | கன்னியாகுமரி | 200 | 103 | 96 | 1 |
12 | கரூர் | 129 | 90 | 39 | 0 |
13 | கிருஷ்ணகிரி | 71 | 32 | 37 | 2 |
14 | மதுரை | 1,073 | 423 | 641 | 9 |
15 | நாகை | 228 | 73 | 155 | 0 |
16 | நாமக்கல் | 90 | 86 | 3 | 1 |
17 | நீலகிரி | 48 | 17 | 31 | 0 |
18 | பெரம்பலூர் | 168 | 146 | 22 | 0 |
19 | புதுக்கோட்டை | 101 | 38 | 61 | 2 |
20 | ராமநாதபுரம் | 338 | 144 | 190 | 4 |
21 | ராணிப்பேட்டை | 545 | 301 | 242 | 2 |
22 | சேலம் | 404 | 215 | 187 | 2 |
23 | சிவகங்கை | 110 | 58 | 51 | 1 |
24 | தென்காசி | 277 | 110 | 167 | 0 |
25 | தஞ்சை | 335 | 150 | 184 | 1 |
26 | தேனி | 365 | 134 | 229 | 2 |
27 | திருப்பத்தூர் | 87 | 43 | 44 | 0 |
28 | திருவள்ளூர் | 2,907 | 1,468 | 1,394 | 45 |
29 | திருவண்ணாமலை | 1,372 | 546 | 819 | 7 |
30 | திருவாரூர் | 272 | 112 | 160 | 0 |
31 | தூத்துக்குடி | 732 | 450 | 278 | 4 |
32 | நெல்லை | 680 | 433 | 242 | 5 |
33 | திருப்பூர் | 121 | 116 | 5 | 0 |
34 | திருச்சி | 434 | 206 | 225 | 3 |
35 | வேலூர் | 580 | 153 | 424 | 3 |
36 | விழுப்புரம் | 654 | 424 | 218 | 12 |
37 | விருதுநகர் | 275 | 148 | 126 | 1 |
38 | சர்வதேச விமான நிலைய கண்காணிப்பு | 308 | 128 | 179 | 1 |
39 | உள்நாட்டு விமான நிலைய கண்காணிப்பு | 176 | 62 | 114 | 0 |
40 | ரயில்வே கண்காணிப்பு | 402 | 197 | 205 | 0 |
மொத்தம் | 67,468 | 37,763 | 28,836 | 866 |