This Article is From Apr 29, 2020

சென்னையில் கொரோனா… என்ன நிலைமை… மண்டலவாரியாக முழு விவரம்!

வயது வாரியாக மாநிலம் முழவதும் 12 வயதுக்குட்பட்டவர்களில் 121 பேருக்கும், 13 முதல் 60 வயது வரையில் 1,697 பேருக்கும், 60 வயதுக்கு அதிகமானோரில் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா… என்ன நிலைமை… மண்டலவாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் நேற்று புதியதாக 121 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 103 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று சென்னை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை.சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (28.04.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 15

மணலி - 1

மாதவரம் - 4

தண்டையார்பேட்டை - 70

ராயபுரம் - 164

திரு.வி.க நகர் - 128

அம்பத்தூர் - 19

அண்ணா நகர் - 65

தேனாம்பேட்டை - 81

கோடம்பாக்கம் - 60

வளசரவாக்கம் - 26

ஆலந்தூர் - 9

 அடையாறு - 19

பெருங்குடி - 9

சோழிங்கநல்லூர் - 2

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1

ஏப்ரல் 29 ஆம் தேதி, காலை 10 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 673 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வாரியாக மாநிலம் முழவதும் 12 வயதுக்குட்பட்டவர்களில் 121 பேருக்கும், 13 முதல் 60 வயது வரையில் 1,697 பேருக்கும், 60 வயதுக்கு அதிகமானோரில் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

.