தமிழகத்தில் நேற்று 580 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 316 பேர். ஒட்டுமொத்த அளவில் 5,409 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிக்கப்பட்ட 580 பேரில் 410 பேர் ஆண்கள், 170 பேர் பெண்கள் ஆவர். ஒட்டுமொத்த அளவில் 3,730 ஆண்கள், 1,677 பெண்கள் மற்றும் 2 திருநங்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்த அளவில் வடசென்னை திரு.வி.க நகரில் அதிக அளவில் கொரோனா தொற்று இருந்து வந்தது. தற்போது வடசென்னை திரு.வி.க நகரை பின்னுக்குத்தள்ளி தென்சென்னையின் கோடம்பாக்கம் சென்னையிலேயே அதிக பாதிக்கப்பட்ட பகுதியாக மாறியுள்ளது.
சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (07.05.2020) வருமாறு:
திருவொற்றியூர் - 43
மணலி - 14
மாதவரம் - 33
தண்டையார்பேட்டை - 184
ராயபுரம் - 422
திரு.வி.க நகர் - 448
அம்பத்தூர் - 144
அண்ணா நகர் - 206
தேனாம்பேட்டை - 316
கோடம்பாக்கம் - 461
வளசரவாக்கம் - 205
ஆலந்தூர் - 16
அடையாறு - 107
பெருங்குடி - 22
சோழிங்கநல்லூர் - 15
மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 8
மே 8 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 2,644 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.